×

114 பேர் பங்கேற்பு புகழூர் அரசு பள்ளிக்கு ரூ.4 லட்சத்தில் நுழைவாயில்

 

வேலாயுதம்பாளையம்: புகழூரில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. 1958ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பள்ளியில் சுற்று வட்டாரத்தில் உள்ள பல கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் 1993ம் ஆண்டு முதல் 1995ம் ஆண்டு வரை 11 மற்றும் 12ம் வகுப்பில் கணிதம், அறிவியல், கலைப் பிரிவுகளில் 243 மாணவ, மாணவிகள் கல்வி பயின்றனர். 27 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திக்க முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஒன்று சேர்ந்த மாணவர்கள் புயலால் சேதமடைந்த பள்ளியின் நுழைவு வாயில் மற்றும் முன்பக்க சுவர் ஆகியவற்றை 4 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டி அதற்கான திறப்பு விழாவினை நடத்தினர்.

அதனை தொடர்ந்து அந்த காலகட்டத்தில் பணியாற்றிய ஆசிரியர்களை வரவழைத்து அவர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி ஆசி பெற்றனர். இதனை தொடர்ந்து கலந்து கொண்ட அனைவரும் ஒருவருக்கு ஒருவர் தாங்கள் படித்த போது ஏற்பட்ட கடந்த கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். பின்னர் அனைவரும் ஒன்று கூடி பேசு பேசி மகிழ்ந்ததுடன் செல்பிக்களை எடுத்து மகிழ்ந்தனர். பின்பு, பறை இசைக்கு ஏற்ப முன்னாள் மாணவர்கள் நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனை தொடர்ந்து அனைவரும் இணைந்து குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டு அனைவரும் பிரிந்து சென்றனர்.

இப்பள்ளியில் பயின்ற மாணவ, மாணவிகள் பல்வேறு துறைகளில் நல்ல நிலையில் இருந்து வருகின்றனர். இன்று நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் புகழூர் நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன், மற்றும்பலரும் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 1991ம் ஆண்டு பயின்ற மாணவர்கள் பள்ளியின் வேதியியல் ஆய்வகத்தை புதுப்பித்து முன்னாள் மாணவர்கள் சந்திப்பை நடத்தியது குறிப்பிடதக்கது.

The post 114 பேர் பங்கேற்பு புகழூர் அரசு பள்ளிக்கு ரூ.4 லட்சத்தில் நுழைவாயில் appeared first on Dinakaran.

Tags : Pukhazur Govt School ,Velayuthampalayam ,Government Higher Secondary School ,Bukazhur ,
× RELATED கடலாடியில் காவிரி குடிநீர் குழாய் உடைப்பு: சீரமைக்க கோரிக்கை