×

காந்தியின் பேரன் நினைவஞ்சலி கூட்டம்

 

மதுரை, மே 3: காந்தியின் இரண்டாவது மகன் மணிலால்காந்தி- சுசிலா தம்பதியின் மகன் அருண்காந்தி. இவர் ஆப்பிரிக்க, ஆசிய, ஐரோப்பிய நாடுகளில் காந்திய சிந்தனை மற்றும் அமைதி விஞ்ஞானம் ஆகியவை குறித்து செயல்முறை பிரசாரம் செய்து வந்தார். இந்நிலையில் அருண்காந்தி(89) உடல் நலக்குறைவு காரணமாக மகாராஷ்டிராவின் கோல்காப்பூரில் காலமானார்.

அவரது மறைவை தொடர்ந்து மதுரை காந்தி மியூசியத்தில் மவுன அஞ்சலி கூட்டம் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மியூசியத்தின் செயலாளர் கே.ஆர்.நந்தாராவ் தலைமை வகித்தார். கல்வி அலுவலர் நடராஜன் இரங்கல் உரையாற்றினார். ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், நூலகர் ரவிச்சந்திரன் உள்பட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

The post காந்தியின் பேரன் நினைவஞ்சலி கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Gandhi ,Madurai ,Manilal Gandhi- Susila ,Arun Gandhi ,
× RELATED காந்தி மியூசியத்தில் படிப்பிடை பயிற்சி