×

திண்டுக்கல் அருகே சட்ட கல்லூரி மாணவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை

திண்டுக்கல்/ வடமதுரை, மே 3: திண்டுக்கல் நாகல் நகரை சேர்ந்த பாலமுருகன் மகள் யாஸ்வந்தினி (20). இவர் திருச்சியில் உள்ள சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். விடுமுறைக்காக ஊருக்கு வந்த இவர், நேற்று காலை திண்டுக்கல்லில் இருந்து திருச்சி செல்லும் பயணிகள் ரயில் மூலம் திருச்சிக்கு சென்று கொண்டு இருந்தார். தாமரைப்பாடி ரயில் நிலையம் வந்ததும் ரயிலை விட்டு இறங்கிய யாஷ் வந்தனி தண்டவாளத்தில் இறங்கி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து உடனே திண்டுக்கல் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் ரயில்வே இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி, எஸ்ஐ மணிகண்டன், எஸ்பி தனிப்பிரிவு போலீஸ் ராஜேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிந்து மாணவி காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திண்டுக்கல் அருகே சட்ட கல்லூரி மாணவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Dindigul ,North Madurai ,Balamurugan ,Yaswanthini ,Dindigul Nagal ,Trichy ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும்...