×

வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்

திருபுவனை, மே 3: புதுச்சேரி முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் திருபுவனை பகுதியில் 3 மணி நேரம் இடைவிடாது மழை பெய்தது. தற்போது விழுப்புரம் நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலை பணிகள் நடந்து வருகிறது. இரு புறங்களிலும் கழிவுநீர் வடிகால் வய்க்கால் அமைப்பட்டுள்ளது. புதுச்சேரி விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து மதகடிப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு செல்லும் பாதையில் கழிவு நீர் வாய்க்கால் சாலை மட்டத்துக்கு போடப்பட்டுள்ளது. இதனால் மழை நீர் தாழ்வான பகுதியில் சாலை அருகில் உள்ள வீடுகளுக்குள் சென்று நிரம்பி விட்டது. இரவு முழுவதும் வீடுகளில் உறங்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வந்தனர். தகவலறிந்த மண்ணாடிப்பட்டு கொம்யூன் ஆணையர் எழில்ராஜன் உத்தரவின் பேரில் உதவி பொறியாளர் மல்லிகார்ஜூனன் இளநிலை பொறியாளர் பாஸ்கர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று மழை நீர் தேங்கியிருந்த வீடுகளில் ஆய்வு செய்து மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர்.

The post வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் appeared first on Dinakaran.

Tags : Tirupuvana ,Puducherry ,Thirubuvana ,
× RELATED புதுச்சேரியில் பள்ளிகளுக்கு ஜூன் 12ம் தேதி வரை கோடை விடுமுறை நீட்டிப்பு