×

மதுபான கொள்கை முறைகேடு மூலம் கிடைத்த ரூ.100 கோடி ஊழல் பணத்தில் கோவாவில் தேர்தல் பிரசாரம்: ஆம் ஆத்மி மீது அமலாக்க துறை குற்றப்பத்திரிகை

புதுடெல்லி: பு டெல்லியில் ஆம் ஆத்மி அரசின் புதிய மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறது. இந்த வழக்கில் டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

அதில், ‘தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளும் எம்எல்சியுமான கவிதா உட்பட சில தொழிலதிபர்கள் கொண்ட ‘சவுத் குரூப் மதுபான லாபியிடமிருந்து பெற்ற ரூ.100 கோடி பணத்தின் ஒரு பகுதியை ஆம் ஆத்மி கடந்த ஆண்டு கோவா தேர்தல் செலவுகளுக்கு பயன்படுத்தி உள்ளது. சேரியாட் புரொடக்ஷன் மீடியா என்ற நிறுவனம் வங்கி மூலமாகவும், ஹவாலா மூலமாகவும் ஆம் ஆத்மிக்கு பணத்தை அனுப்பி உள்ளது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

The post மதுபான கொள்கை முறைகேடு மூலம் கிடைத்த ரூ.100 கோடி ஊழல் பணத்தில் கோவாவில் தேர்தல் பிரசாரம்: ஆம் ஆத்மி மீது அமலாக்க துறை குற்றப்பத்திரிகை appeared first on Dinakaran.

Tags : Goa ,Enforcement Department ,Aadmy ,New Delhi ,CBI ,Aam Aadmi Government ,
× RELATED முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி...