திருப்பூர், மே 3: திருப்பூர் மாவட்டத்தில் 624.30 மில்லி மீட்டர் மழை பதிவானது. திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பெய்த மழை அளவின் விவரம் வருமாறு:-திருப்பூர் வடக்கு பகுதி 55 மி.மீ, குமார் நகர் 100.40 மி. மீ, திருப்பூர் தெற்கு பகுதி 61 மி. மீ, பல்லடம் ரோடு 64 மி. மீ, அவிநாசி 40 மி. மீ, ஊத்துகுளி 74 மி. மீ, மடத்துக்குளம் 3 மி. மீ, தாராபுரம் 15 மி. மீ, மூலனூர் 7 மி. மீ, குண்டடம் 17 மி. மீ. உடுமலை 1 மி. மீ, காங்கேயம் 39.20 மி. மீ, வெள்ளகோவில் 13.30 மி. மீ, பல்லடம் 24 மி. மீ உள்பட மாவட்டம் முழுவதும் 624.30 மி.மீட்டர் மழை பதிவானது. இதன் சராசரி 31.21 மி. மீட்டர் ஆகும்.
The post திருப்பூர் மாவட்டத்தில் 624.30 மில்லி மீட்டர் மழை பதிவு appeared first on Dinakaran.

