×

திருத்தணியில் சோகம் குளத்தில் தவறி விழுந்து குழந்தை பலி: போலீசார் விசாரணை

 

திருவள்ளூர்: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருவள்ளூர் மாவட்ட பிரிவின் சார்பாக மே மாதம் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம் ஒருங்கிணைந்த மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கம் மற்றும் ஆவடி நாசரேத் கலை, அறிவியல் கல்லூரி விளையாட்டு மைதானம் ஆகிய இடங்களில் தொடங்கியது. இந்நிலையில் பயிற்சி முகாமின் துவக்க விழா மாவட்ட விடையாட்டரங்கத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் பிரேம்குமார் தலைமை தாங்கினார்.

பயிற்சி முகாமை மாவட்ட கல்வி அலுவலர் தேன்மொழி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். மேலும் விழாவில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் நரசிம்மா, பயிற்சியாளர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். இந்த கோடைக்கால பயிற்சி முகாம், மாவட்ட விளையாட்டு அலுவலர் பிரேம்குமார் மேற்பார்வையில் 15ம் தேதி வரை நடைபெற உள்ளது. எனவே மாணவ, மாணவிகள் இந்த கோடைகாட பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

The post திருத்தணியில் சோகம் குளத்தில் தவறி விழுந்து குழந்தை பலி: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Tiruthani ,Tiruvallur ,Tamil Nadu Sports Development Authority ,Tiruvallur District Division ,
× RELATED திருத்தணியில் ஜவுளிப்பூங்கா அமைக்க...