×

பெரியகுப்பத்தில் நாளை மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம்

 

திருவள்ளூர்: திருவள்ளூர் கோட்டத்தில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை 4ம் தேதி திருவள்ளூர் பெரியகுப்பத்தில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு காஞ்சிபுரம் மின்பகிர்மான வட்டம் தலைமை பொறியாளர் சுனில் குமார் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே திருவள்ளூர் கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்கள் மற்றும் பொது மக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள மின்துறை சம்மந்தமான புகார்களை நேரில் தெரிவிக்கலாம் என திருவள்ளூர் கோட்ட செயற்பொறியாளர் கனகராஜன் தெரிவித்துள்ளார்.

The post பெரியகுப்பத்தில் நாளை மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Periyakuppam ,Thiruvallur ,Thiruvallur Division ,E-Consumer Grievance Redressal Day ,Periyakuppa ,
× RELATED சோழவரம் அருகே மின்சாரம் பாய்ந்து லாரியில் தீ: ஓட்டுநர் பலி