×

கார்ப்பரேட்களுக்கு சலுகை வழங்கும் ஒன்றிய அரசு விவசாயிகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவில்லை: அய்யாக்கண்ணு குற்றச்சாட்டு

சென்னை:சென்னை, தலைமைச் செயலகத்தில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாய பிரதிநிதிகள் நேற்று சந்தித்து பேசினர். அப்போது, மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்பட்டு வரும் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்க கூடாது என மனு வழங்கினர்.

பின்னர் அய்யாக்கண்ணு பேட்டி அளிக்கையில்,‘‘ ஒன்றிய அரசு விவசாயிகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே சலுகைகளை வழங்கி வருகிறது” என்று தெரிவித்தார்.

The post கார்ப்பரேட்களுக்கு சலுகை வழங்கும் ஒன்றிய அரசு விவசாயிகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவில்லை: அய்யாக்கண்ணு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Union government ,Ayakkanu ,Chennai ,National South Indian Rivers Link Agricultural Association ,Minister ,Makesh ,Leadership Secretariat ,
× RELATED மிக்ஜாம் புயலின் பாதிப்பில் இருந்து...