×

பள்ளி கல்வித்துறையில் 20 சிஇஓக்கள் மாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: பள்ளிக்கல்வித்துறையில் முதன்மைக் கல்வி அதிகாரிகள் (சிஇஓ) அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள உத்தரவு: திருப்பூர் முதன்மை கல்வி அலுவலர் திருவளர் செல்வி, ஆசிரியர் தேர்வு வாரிய துணை இயக்குநராகவும், ஈரோடு முதன்மைக் கல்வி அலுவலர் அய்யண்ணன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக துணை இயக்குநராகவும், விருதுநகர் முதன்மைக் கல்வி அலுவலர் ஞானகவுரி, மாநில பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளராகவும், கோவை முதன்மைக் கல்வி அலுவலர் பூபதி, தொடக்க கல்வி (நிர்வாகம்) துணை இயக்குநராகவும், பெரம்பலூர் முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன், விழுப்புரம் முதன்மைக் கல்வி அலுவலராகவும், திருச்சி முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி, திருப்பூர் முதன்மைக் கல்வி அலுவலராகவும், தஞ்சாவூர் முதன்மைக் கல்வி அலுவலர் சிவக்குமார், திருச்சி முதன்மைக் கல்வி அலுவலராகவும், கன்னியாகுமரி முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி, திருவாரூர் முதன்மைக் கல்வி அலுவலராகவும், சேலம் முதன்மைக் கல்வி அலுவலர் முருகன், கன்னியாகுமரி முதன்மைக் கல்வி அலுவலராகவும், புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன், பெரம்பலூர் முதன்மைக் கல்வி அலுவலராகவும், தென்காசி முதன்மைக் கல்வி அலுவலர் கபீர், சேலம் முதன்மைக் கல்வி அலுவலராகவும், கள்ளக்குறிச்சி முதன்மைக் கல்வி அலுவலர் சரஸ்வதி, திருவள்ளூர் முதன்மைக் கல்வி அலுவலராகவும், திருவள்ளூர் முதன்மைக் கல்வி அலுவலர் ராமன், விருதுநகர் முதன்மைக் கல்வி அலுவலராகவும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் துணை இயக்குநர் ஆறுமுகம், ஆசிரியர் தேர்வு வாரிய துணை இயக்குநராகவும், தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மைய நிர்வாக அலுவலர் எம்.முத்தையா, தென்காசி முதன்மைக் கல்வி அலுவலராகவும், தொடக்கக் கல்வி இயக்கக துணை இயக்குநர் (சட்டம்) பாலதண்டாயுதபாணி, தஞ்சாவூர் முதன்மைக் கல்வி அலுவலராகவும், தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளர் மஞ்சுளா, புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலராகவும், ஆசிரியர் தேர்வு வாரிய துணை இயக்குநர் சுமதி, கோவை முதன்மைக் கல்வி அலுவலராகவும், ஆசிரியர் தேர்வு வாரிய துணை இயக்குர் குழந்தைராஜன், ஈரோடு முதன்மைக் கல்வி அலுவலராகவும், தொடக்கக் கல்வி இயக்கக துணை இயக்குநர் திருநாவுக்கரசு, தொடக்கக் கல்வி துணை இயக்குநராகவும் (சட்டம்) மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

The post பள்ளி கல்வித்துறையில் 20 சிஇஓக்கள் மாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Govt. ,CHENNAI ,School Education Department ,School Education Secretary ,Kakarla Usha ,Tamil ,Nadu ,government ,Dinakaran ,
× RELATED கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு...