×

தமிழ்நாடு முழுவதும் 1,222 இடங்களில் வரும் 7ம் தேதி திமுக அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்: காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 1,222 இடங்களில் வரும் 7ம் தேதி திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது. இதில் காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி கலந்து கொள்கின்றனர். இதுகுறித்து திமுக தலைமை வெளியிட்ட அறிக்கை: திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில், அரசு ஊழியர், ஆசிரியர், மாணவர், மகளிர், கழனியில் பாடுபடும் உழவர், ஆலையில் உழைக்கும் தொழிலாளி, மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் நலன் பேணும் கழக அரசின் சிறப்புகளையும், மக்கள் வாழ்வில் வளம் சேர்க்கும் சீர்மிகு திட்டங்களையும், திமுக அரசின் சாதனைகளையும், மக்களிடம் கொண்டு சேர்த்திடும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள 72 மாவட்டங்களுக்குட்பட்ட ஒன்றிய, நகர, பகுதி ஆகிய அமைப்புகளின் சார்பில் மே 7, 8, 9 ஆகிய நாட்களில் திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெறும்.

பொதுக்கூட்டங்கள் நடைபெறும் இடங்கள் மற்றும் பங்கேற்று உரை நிகழ்த்தும் சொற்பொழிவாளர்கள் விவரம்: வரும் 7ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, காஞ்சிபுரம், வடக்கு மாவட்டம் கன்டோன்மென்ட் நகரம் பகுதியில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி, கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கிழக்குபகுதி பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன், எஸ்.ஜெத்ரட்சன் எம்.பி, சேலம் மேற்கு மாவட்டம், தாரமங்கலம் நகரம், முதன்மை செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, தேனி வடக்கு மாவட்டம், பெரியகுளம் நகரம் துணை ெபாதுச்செயலாளர் அமைச்சர் ஐ.ெபரியசாமி, கடலூர் மேற்கு மாவட்டம், பண்ருட்டி வடக்கு ஒன்றியம், துணைப் பொதுச்செயலாளர் அமைச்சர் ெபான்முடி, நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஒன்றியம், துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி, ஈரோடு தெற்கு மாவட்டம், கொடுமுடி வடக்கு ஒன்றியம், துணைப் பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ் எம்.பி, தூத்துக்குடி வடக்கு மாவட்டம், தூத்துக்குடி, துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி, சென்னை மேற்கு மாவட்டம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி பகுதி இளைஞர் அணி செயலாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.

காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம் சுப.வீரபாண்டியன், வாலாஜாபாத் தெற்கு ஒன்றியம் மனுஷ்யபுத்திரன், காஞ்சிபுரம் 1வது பகுதி ஜி.செல்வம் எம்.பி, காஞ்சிபுரம் 4வது பகுதி கவிஞர் நன்மாறன், லத்தூர் தெற்கு ஒன்றியம் சைதை சாதிக், சித்தாமூர் மேற்கு ஒன்றியம் கோ.தமிழரசன், மதுராந்தகம் வடக்கு ஒன்றியம் வண்ணை புகாரி. காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் குன்றத்தூர் வடக்கு ஒன்றியம் எழும்பூர் கோபி, நந்திவரம்- கூடுவாஞ்சேரி நகரம் தமிழ்மாறன், பெருங்களத்தூர் தெற்கு பகுதி ஏ.எஸ்.கார்த்திக் (எ) சவுந்திரராஜன், பெரும்புதூர் வடக்கு ஒன்றியம் வள்ளிமைந்தன், பெரும்புதூர் தெற்கு ஒன்றியம் நெல்லை என்.மணி, பல்லாவரம் வடக்கு பகுதி வண்ணை மோகன், செம்பாக்கம் வடக்கு பகுதி அன்புவாணன்.

சென்னை கிழக்கு மாவட்டம், அம்பத்தூர் வடக்கு பகுதி சேப்பாக்கம் பிரபாகரன், எழும்பூர் வடக்கு பகுதி க.எழிலன், கொளத்தூர் மேற்கு பகுதி கலாநிதி வீராசாமி எம்.பி, துறைமுகம் கிழக்கு பகுதி கவிஞர் ஈகை கோ.தனசேகரன், வில்லிவாக்கம் மேற்கு பகுதி எம்.எல்.நாதன், வில்லிவாக்கம் கிழக்கு பகுதி ப.தாயகம் கவி எம்.எல்.ஏ, சென்னை தெற்கு மாவட்டம், சைதை கிழக்கு பகுதி அமைச்சர் மா.சுப்பிரமணியன், தாமஸ்மலை தெற்கு ஒன்றியம் முரசொலி மூர்த்தி, சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி சிவப்பிரகாசம், வேளச்சேரி கிழக்கு பகுதி பத்மபிரியா, சென்னை தென்மேற்கு மாவட்டம், தியாகராயர் நகர் மேற்கு பகுதி ஆவடி பாஸ்கர், சென்னை வடகிழக்கு மாவட்டம், திருவொற்றியூர் மத்திய பகுதி ஆர்.ஜெயசீலன், வில்லிவாக்கம் வடக்கு ஒன்றியம் ஜெ.கண்ணன், மாதவரம் வடக்குபகுதி மு.அஜிம், சென்னை வடக்கு மாவட்டம், ஆர்.கே.நகர் கிழக்கு பகுதி அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ெபரம்பூர் வடக்கு பகுதி தஞ்சை கூத்தரசன்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், எல்லாபுரம் வடக்கு ஒன்றியம் தமிழ் சாதிக், கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றியம் டாக்டர் தயாநிதி, மீஞ்சூர் வடக்கு ஒன்றியம் ஏ.திராவிடமணி, சோழவரம் வடக்கு ஒன்றியம் ஆதித்யன், திருவள்ளூர் மத்திய மாவட்டம், பூந்தமல்லி மேற்கு ஒன்றியம் சாமுவேல் தங்கம், திருநின்றவூர் நகரம், அமைச்சர் சா.மு.நாசர், ஆவடி கிழக்கு பகுதி கதிர் மீனாட்சி சுந்தரம், திருவள்ளூர் கிழக்கு ஒன்றியம் தமிழன்பன், திருவள்ளூர் மேற்கு மாவட்டம், திருத்தணி கிழக்கு ஒன்றியம் நாத்திகம் நாகராசன், பள்ளிப்பட்டு தெற்கு ஒன்றியம் மலர் மு.கருணாநிதி, திருத்தணி நகரம் செங்கை தாமஸ், பூண்டி மேற்கு ஒன்றியம் பரிதி இளம் சுருதி, திருவள்ளூர் மேற்கு ஒன்றியம் கவிஞர் சு.கொளஞ்சிநாதன், சேலம் மத்திய மாவட்டம், அரிசிபாளையம் பகுதி தயாநிதி மாறன் எம்.பி, சேலம் தெற்கு ஒன்றியம் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி, அழகாபுரம் பகுதி பவானி கண்ணன் ஆகியோர் உரையாற்றுகின்றனர். இதேபோன்று தமிழகம் முழுவதும் 1,222 இடங்களில் உரையாற்றுபவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 8, 9 ஆகிய தேதிகளுக்கான பட்டியல் தொடர்ந்து வெளியிடப்படும்.

The post தமிழ்நாடு முழுவதும் 1,222 இடங்களில் வரும் 7ம் தேதி திமுக அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்: காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார் appeared first on Dinakaran.

Tags : Dizhagam Government ,Tamil Nadu ,Chief Minister of State ,Kanchipura ,G.K. Stalin ,Chennai ,Djugam Government ,Chief Minister of ,B.C. ,
× RELATED தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய...