×

ஐசிசி டெஸ்ட் தரவரிசை இந்தியா நம்பர் 1

துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில், இந்திய அணி முதலிடத்துக்கு முன்னேறி உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ள நிலையில், தரவரிசையில் ஆஸ்திரேலியாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா நம்பர் 1 அந்தஸ்தை கைப்பற்றி உள்ளது. ஐசிசி நேற்று வெளியிட்ட தரவரிசையில், இந்தியா 121 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. ஆஸ்திரேலியா (116), இங்கிலாந்து (114), தென் ஆப்ரிக்கா (104), நியூசிலாந்து (100) அணிகள் டாப் 5ல் இடம் பெற்றுள்ளன. பாகிஸ்தான் (86) 6வது இடத்தில் உள்ளது.

The post ஐசிசி டெஸ்ட் தரவரிசை இந்தியா நம்பர் 1 appeared first on Dinakaran.

Tags : ICC ,India ,Dubai ,International Cricket Council ,Dinakaran ,
× RELATED ஐசிசியின் மார்ச் மாதத்திற்கான சிறந்த...