×

வாக்குவாதத்தில் ஈடுபட்ட கோஹ்லி, கம்பீருக்கு 100% அபராதம்: நவீனுக்கு 50%

லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணியுடன் நேற்று முன்தினம் இரவு நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணி 18 ரன் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியை ஆர்சிபி நட்சத்திரம் விராத் கோஹ்லி உற்சாகமாகக் கொண்டாடியதுடன் லக்னோ அணி ஆலோசகர் கவுதம் கம்பீருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சைகை செய்து வெறுப்பேற்றினார். இதனால் ஆத்திரம் அடைந்த கம்பீர், கோஹ்லியுடன் வாக்குவாதத்தில் இறங்க களத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சூப்பர் ஜயன்ட்ஸ் கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் வீரர்கள் கம்பீரை சமாதானம் செய்தனர். கைகலப்பு ஏற்படுமோ என்ற அளவுக்கு வார்த்தை போர் புரிந்த இருவரும், பின்னர் கை குலுக்கிப் பிரிந்தனர். லக்னோ இன்னிங்சின் 17வது ஓவரில் நவீன் உல் ஹக் – கோஹ்லி இடையே ஏற்பட்ட மோதலே இந்த வாக்குவாதத்துக்கு காரணமாக அமைந்தது. இந்த நிலையில், விதிமுறைகளை மீறி நடந்து கொண்ட கோஹ்லி, கம்பீர் இருவருக்கும் போட்டிக்கான ஊதியம் முழுவதையும் அபராதமாக விதித்த ஐபிஎல் நிர்வாகம், நவீனுக்கு 50% அபராதம் விதிக்கப்படுவதாக நேற்று அறிவித்தது.

The post வாக்குவாதத்தில் ஈடுபட்ட கோஹ்லி, கம்பீருக்கு 100% அபராதம்: நவீனுக்கு 50% appeared first on Dinakaran.

Tags : Kohli ,Gambhir ,Naveen ,RCB ,IPL ,Lucknow Supergiants ,Dinakaran ,
× RELATED ஐதராபாத் – பெங்களூரு அணிகள் இடையே...