×

3 நாட்களுக்கு சேவை நிறுத்தம் திவாலாகிறது கோ பர்ஸ்ட் விமான நிறுவனம்

மும்பை: மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் கோ பர்ஸ்ட் விமான நிறுவனத்தை வாடியா வர்த்தக குழுமம் நடத்தி வருகிறது. கோ பர்ஸ்ட் நிறுவனம் விமான எரிபொருள் நிறுவனங்களுக்கு அதிகளவில் பணம் நிலுவையில் வைத்துள்ளது. இந்த நிறுவனத்தின் விமானங்களுக்கு அமெரிக்காவை சேர்ந்த பிராட் அன்ட் விட்னி நிறுவனம் இன்ஜின்களை வழங்காமல் தாமதம் செய்து வருகிறது. இதனால் கோ பர்ஸ்ட் நிறுவனத்தின் 28 விமானங்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த காரணங்களால் கடும் நிதி நெருக்கடியை சந்தித்துள்ள விமான நிறுவனம் இன்று முதல் 5ம் தேதி வரை விமான சேவைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த தகவல்களை ஒன்றிய விமானப் போக்குவரத்து ஆணையரகத்துக்கு கோ பர்ஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிறுவனம் டெல்லியிலுள்ள தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் திவால் நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளது.

The post 3 நாட்களுக்கு சேவை நிறுத்தம் திவாலாகிறது கோ பர்ஸ்ட் விமான நிறுவனம் appeared first on Dinakaran.

Tags : Co Burst ,Mumbai ,Wadia Trade Group ,Co ,Burst Airport ,Co Burst Airline ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 913 புள்ளிகள் உயர்வு..!!