×

என்.எல்.சி நில எடுப்பு விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள் குழு விவசாய பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியது!!

சென்னை :என்.எல்.சி நில எடுப்பு விவகாரம் தொடர்பாக மூத்த அமைச்சர்கள் குழு நில உரிமையாளர்கள் மற்றும் விவசாய பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனம் இயங்கி வருகிறது. தற்போதைய சூழலில் 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் புதிதாக 25 ஆயிரம் ஏக்கர் விலை நிலம் கையகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகின.

இதனையடுத்து இந்த நில எடுப்பு விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, கரிவெட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், என்.எல்.சி விவகாரம் தொடர்பாக கடலூர் மாவட்ட நில உரிமையாளர்கள் மற்றும் விவசாய பிரதிநிதிகளுடன் சென்னை, தலைமைச்செயலகத்தில் இன்று மாலை 5 மணிக்கு தலைமைச்செயலர் இறையன்பு தலைமையில் பேச்சுவார்த்தை தொடங்கியது. இந்த கூட்டத்துக்கு அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு மற்றும் சி.வி.கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தெரியவரும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

The post என்.எல்.சி நில எடுப்பு விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள் குழு விவசாய பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியது!! appeared first on Dinakaran.

Tags : N.N. l. ,Committee of Ministers ,FCC ,N. l. C. Senior Ministers Committee ,Agriculture Representatives ,Dinakaran ,
× RELATED என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர் கோரிக்கை:...