×

மிஸ் கூவாகம் 2023 அழகி போட்டியில் முதலிடத்தை பிடித்தார் சென்னையைச் சேர்ந்த திருநங்கை நிரஞ்சனா!!

விழுப்புரம் : மிஸ் கூவாகம் 2023 அழகியாக சென்னையைச் சேர்ந்த திருநங்கை நிரஞ்சனா தேர்வு செய்யப்பட்டார். விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கூத்தாண்டவர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் 18 நாட்கள் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. இந்த சித்திரை திருவிழாவுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான திருநங்கைகள் குவிந்துள்ளனர்.

இந்த நிலையில் சென்னை திருநங்கை நாயக்குகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் ‘மிஸ் கூவாகம்’ அழகிப் போட்டி நடந்தது. இப்போட்டியில் புதுச்சேரி உட்பட 42 மாவட்டங்களில் இருந்து 66 திருநங்கைகள் பங்கேற்றனர். இதில் 16 பேர் இறுதிச்சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இன்று நடந்த இறுதிச் சுற்றில் மிஸ் கூவாகம் 2023 அழகியாக சென்னையைச் சேர்ந்த திருநங்கை நிரஞ்சனா தேர்வானார். 2-ம் இடத்தை சென்னையைச் சேர்ந்த நிஷாவும், 3-ம் இடத்தை சேலத்தைச் சேர்ந்த சாதனாவும் பெற்றனர். மிஸ் கூவாகம் அழகிகளுக்கு விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ. புகழேந்தி கிரீடம் சூட்டினார்.

The post மிஸ் கூவாகம் 2023 அழகி போட்டியில் முதலிடத்தை பிடித்தார் சென்னையைச் சேர்ந்த திருநங்கை நிரஞ்சனா!! appeared first on Dinakaran.

Tags : miss ,kouvagam ,chennai ,Viluppuram ,Niranjana ,Viluppuram District, Uundurbate ,Koovagam ,
× RELATED விழுப்புரத்தில் அழகிப்போட்டி; மிஸ்...