×

மே 7,8-ல் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி

சென்னை: மே 7,8-ல் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன்; வங்கக்கடலில் மே 7, 8-ம் தேதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. மே 6ம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி
உருவாகும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. தமிழ்நாட்டில் 60 இடங்களில் கனமழையும் 11 இடங்களில் மிக பலத்த மழையும் பெய்துள்ளது.

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 60 இடங்களில் கனமழையும், இடங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும். நீலகிரி முதல் தேனி வரையிலான மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும். உள் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் இவ்வாறு கூறினார்.

The post மே 7,8-ல் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Meteorological Research Center ,Balachandran ,President ,Chennai ,Meteorological Centre ,Meteorological Center ,South ,Africa ,
× RELATED புதுவை எம்பி தேர்தலில் படுதோல்வி;...