×

மகாத்மா காந்தியின் மகன் வழி பேரன் அருண் மணிலால் காந்தி (89) உடல்நலக் குறைவால் காலமானார்!!

புனே: மகாத்மா காந்தியின் மகன் வழி பேரன் அருண் காந்தி உடல்நலக் குறைவால் மராட்டியத்தில் காலமானார். எழுத்தாளரும் சமூக-அரசியல் ஆர்வலருமான இவருக்கு வயது 89. நம் தேசதந்தை மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி – கஸ்தூரிபாய் காந்தியின் 2வது மகனான மணிலால் காந்தி, சுசீலா மஷ்ருவாலா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தவர் அருண் மணிலால் காந்தி. இவர் ஏப்ரல் 14, 1934ல் தென்னாப்பிரிக்காவின் டர்பனில் பிறந்தார். தனது வாழ்நாளில்,தாத்தா மகாத்மா காந்தியின் வழி நின்று, அவரது பாதையில் அரசியல் மற்றும் சமூகப் போராளியாக அடையாளம் காணப்பட்டார். 2017ல், The Gift of Anger: And Other Lessons From My Grandfather Mahatma Gandhi ஆகிய புத்தகங்களை வெளியிட்டார்.

தாத்தாவை போலவே அகிம்சை என்ற கருத்தை பின்பற்றிய அருண் காந்தி, செவிலியர் சுர்நந்தாவை 1957ல் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு 2 குழந்தைகள், துஷார், அர்ச்சனா என்ற பிள்ளைகள் உள்ளனர். 2016ம் ஆண்டு வரை, அருண் காந்தி நியூயார்க்கில் உள்ள ரோசெஸ்டரில் வசித்து வந்தார். பின்னர் இந்தியாவுக்கு வந்தார். இந்த நிலையில் இன்று உடல்நலக்குறைவால் அருண் காந்தி காலமானார். அவரின் மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அருண் காந்தியின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை கோலாப்பூரில் நடைபெற இருப்பதாக, அருண் காந்தியின் மகன் துஷார் காந்தி தெரிவித்துள்ளார்.

The post மகாத்மா காந்தியின் மகன் வழி பேரன் அருண் மணிலால் காந்தி (89) உடல்நலக் குறைவால் காலமானார்!! appeared first on Dinakaran.

Tags : mahatma gandhi ,arun manilal gandhi ,Pune ,Arun Gandhi ,Maratham ,
× RELATED திருமயம், ஆலங்குடியில் 20 அரசு...