×

பிஷ்னோய் அபார பந்துவீச்சு வீண் சூப்பர் ஜயன்ட்சை வீழ்த்தியது ஆர்சிபி

லக்னோ: சூப்பர் ஜயன்ட்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 18 ரன் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. வாஜ்பாய் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பேட் செய்தது. கோஹ்லி, டு பிளெஸ்ஸி இணைந்து ஆர்சிபி இன்னிங்சை தொடங்கினர். 2வது ஓவரில் பீல்டிங் செய்தபோது காயம் அடைந்த லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல் பெவிலியன் திரும்பினார். நிதானமாக விளையாடிய கோஹ்லி – டு பிளெஸ்ஸி ஜோடி முதல் விக்கெட்டுக்கு 9 ஓவரில் 62 ரன் சேர்த்தது. கோஹ்லி 31 ரன் (30 பந்து, 3 பவுண்டரி) எடுத்து பிஷ்னோய் பந்துவீச்சில் ஸ்டம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். ஒரு முனையில் டு பிளெஸ்ஸி உறுதியுடன் போராட… அடுத்து வந்த அனுஜ் ராவத் 9 ரன், மேக்ஸ்வெல் 4 ரன், பிரபுதேசாய் 6 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்து அணிவகுத்தனர்.

மழை குறுக்கீடு: ஆர்சிபி அணி 15.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 93 ரன் எடுத்திருந்த நிலையில், மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. டு பிளெஸ்ஸி 40 ரன், தினேஷ் கார்த்திக் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சிறிது நேர காத்திருப்புக்குப் பின்னர் ஆட்டம் மீண்டும் தொடங்கியது. டு பிளெஸ்ஸி 44 ரன் (40 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து அமித் சுழலில் க்ருணால் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த லோம்ரர் 3 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

தினேஷ் கார்த்திக் 16 ரன் (11 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ரன் அவுட்டானார். கர்ண் ஷர்மா (2), சிராஜ் (0) அடுத்தடுத்து நவீன் உல் ஹக் வேகத்தில் வெளியேறினர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 126 ரன் எடுத்தது. ஹசரங்கா 8 ரன், ஹேசல்வுட் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். லக்னோ பந்துவீச்சில் நவீன் உல் ஹக் 3, பிஷ்னோய், அமித் மிஷ்ரா தலா 2, கிருஷ்ணப்ப கவுதம் 1 விக்கெட் கைப்பற்றினர்.

அடுத்து களமிறங்கிய லக்னோ அணி 19.5 ஓவரில் 10 விக்கெட் இழப்புக்கு 108 ரன் எடுத்து, 18 ரன் வித்தியாசத்தில் தோற்றது. கிருஷ்ணப்ப கவுதம் அதிகபட்சமாக 23 ரன் (13 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். 19.5 ஓவர் முடிவில் சூப்பர் ஜயன்ட்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் பரிதாபமாக பறி கொடுத்து தோற்றது. இறுதிவரை கேப்டன் ராகுல் ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் இருந்தார். ஆர்சிபி பந்துவீச்சில் ேஹசில்வுட் 2 விக்கெட், கரண் ஷர்மா 2 விக்கெட் எடுத்தனர். புள்ளிப் பட்டியலில் ஆர்சிபி 5 வது இடத்துக்கு முன்னேறியது.

The post பிஷ்னோய் அபார பந்துவீச்சு வீண் சூப்பர் ஜயன்ட்சை வீழ்த்தியது ஆர்சிபி appeared first on Dinakaran.

Tags : Bishnoi ,Vain Super Giantz ,RCB ,Lucknow ,IPL League ,Super Giants ,Royal Challengers Bangalore ,Bishnoi Bizarre ,Dinakaran ,
× RELATED 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி...