×

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் காலிறுதியில் பெகு

மாட்ரிட்: ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் விளையாட, ருமேனியா வீராங்கனை இரினா பெகு தகுதி பெற்றார். 4வது சுற்றில் ரஷ்யாவின் லியுட்மிலா சாம்சனோவாவுடன் (24 வயது, 18வது ரேங்க்) மோதிய இரினா பெகு (32 வயது, 35வது ரேங்க்) 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். விறுவிறுப்பான இப்போட்டி 1 மணி, 47 நிமிடத்துக்கு நீடித்தது. மற்றொரு 4வது சுற்றில் பெல்ஜியம் வீராங்கனை எலிஸ் மெர்டென்ஸ் (27 வயது, 17வது ரேங்க்) 4-6, 6-0, 4-6 என்ற செட் கணக்கில் எகிப்தின் மயர் ஷெரீபிடம் (26 வயது, 59வது ரேங்க்) போராடி தோற்றார்.

The post மாட்ரிட் ஓபன் டென்னிஸ் காலிறுதியில் பெகு appeared first on Dinakaran.

Tags : Begu ,Madrid Open ,Madrid ,Romania ,Irina ,Spain ,Pegu ,Dinakaran ,
× RELATED சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்