×

மும்பை அணியில் கிறிஸ் ஜோர்டன்

மும்பை: ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, நடப்பு சீசனில் தட்டுத்தடுமாறி வருகிறது. இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி தலா 4 வெற்றி, தோல்விகளுடன் 7வது இடத்தில் பின்தங்கி உள்ளது. எனினும், எஞ்சிய ஆட்டங்களில் வெல்வதன் மூலம் பிளே ஆப் சுற்று வாய்ப்பை பெற முடியும் என்ற நம்பிக்கையுடன் மும்பை உள்ளது. அணியின் முக்கிய வீரரான பும்ரா காயம் காரணமாக விலகியுள்ளார். காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள வேகப் பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் (இங்கிலாந்து) முன்பு போல் விக்கெட் வேட்டை நடத்த முடியாமல் திணறி வருகிறார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜை ரிச்சர்ட்சன் காயத்தால் விலகியதும் மும்பை இந்தியன்சுக்கு பின்னடைவை கொடுத்துள்ளது. மற்றொரு ஆஸி. வேகம் பெஹரண்டார்ப் பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை.

இந்நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த கிறிஸ் ஜோர்டன் (34வயது) மாற்று வீரராக மும்பை அணியில் இணைந்துள்ளார். ஐபிஎல் ஏலத்தின்போது இவருக்கு அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டு இருந்த நிலையில், யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை. கடந்த ஐபிஎல் தொடர்களில் பெங்களூர், ஐதராபாத், பஞ்சாப், சென்னை அணிகளுக்காக விளையாடி உள்ளார். மொத்தம் 28 ஆட்டங்களில் விளையாடி 27 விக்கெட் அறுவடை செய்துள்ளார். பிப்ரவரியில் நடந்த வளைகுடா டி20 தொடரில், 10 ஆட்டங்களில் விளையாடி 20 விக்கெட் அள்ளி முதல் இடம் பிடித்து இருந்தார். அதனால் மும்பை அணி நம்பிக்கையுடன் ஜோர்டனை களமிறக்க காத்திருக்கிறது. மும்பை தனது அடுத்த ஆட்டத்தில், நாளை மொகாலியில் பஞ்சாப் அணியுடன் மோதுகிறது.

The post மும்பை அணியில் கிறிஸ் ஜோர்டன் appeared first on Dinakaran.

Tags : Chris Jordan ,Mumbai ,Mumbai Indians ,IPL ,Dinakaran ,
× RELATED மும்பை இந்தியன்சை வீழ்த்தியது லக்னோ