×

பிரதமர் மோடி தகுதியற்றவர் கார்கே மகன் விமர்சனம்: நட்டா பதிலடி

கலபுர்கி: பிரதமர் மோடி தகுதியற்றவர் என்று காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேயின் மகன் பிரியாங்க் கார்கே விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பாஜ தேசிய தலைவர் நட்டா பதிலடி கொடுத்துள்ளார். கலபுர்கி மாவட்டம் சித்தாபூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியாங்க் கார்கே களத்தில் நிற்கிறார். இவர் மே 10ம் தேதி நடக்கும் தேர்தலையொட்டி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது அவர் பேசுகையில், ‘பிரதமர் மோடி கலபுர்கி வந்த போது பஞ்சாரா சமூகத்தினரின் பிள்ளை நான் என்று பெருமைபடுத்திக்கொண்டார். ஆனால் பாஜ ஏற்கனவே எஸ்சி வகுப்பின் இடஒதுக்கீட்டில் குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளதால் பிரதமர் மோடி தகுதியற்றவர் என்றே கூற வேண்டும்.

கலபுர்கி வரும்போதெல்லாம் பிரதமர் மோடி, பஞ்சார சமூகத்தை பார்த்து, நீங்கள் எதற்கும் கவலைப்படாதீர்கள். டெல்லியில் உங்கள் சமூகத்தை சார்ந்த பிள்ளை அமர்ந்துள்ளான் என்று கூறுகிறார். இப்படி ஒரு தகுதியற்ற நாயகன் டெல்லியில் அமர்ந்திருந்தால், எப்படி இங்கே குடும்பம் நடக்கும் சகோதரரே என்று கேட்க வேண்டியுள்ளது. ஷிகாரிபுராவில் எடியூரப்பா வீட்டின் மீது கல்வீசி தாக்குத் நடந்தது எதற்கு? பஞ்சாரா சமூகத்தினருக்கு அநீதி ஏற்பட்டதால் தான். கலபுர்கியிலும், ஜேவர்கியிலும் பந்த் கடைபிடிக்கப்பட்டது எதற்கு? எஸ்சி வகுப்பினர் இடஒதுக்கீட்டில் பாஜ அரசு குழப்பம் ஏற்படுத்தியதால் தான்’. இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள பாஜ ேதசிய தலைவர் ஜே.பி.நட்டா, ‘காங்கிரசுக்கு தோல்விபயம் வந்து விட்டது என்பது அவர்கள் பிரதமர் மோடியை அவதூறு பேசுவதில் இருந்து தெரிகிறது. சோனியா, ராகுலை மகிழ்விக்கத்தான் காங்கிரசார் பிரதமரை விமர்சிக்கிறார்கள். இதனால் மக்களிடையே பிரதமரின் மதிப்பு உயரத்தான் செய்யும்’ என்றார்.

The post பிரதமர் மோடி தகுதியற்றவர் கார்கே மகன் விமர்சனம்: நட்டா பதிலடி appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Karke ,Kalapurki ,Congress ,National Leader ,Malligarjun Karke ,Priyang Karge ,Modi ,PM ,
× RELATED சீர்திருத்தத்தின் திசையை நோக்கி...