×

கிரேட் நிகோபார் திட்டத்தால் பழங்குடியினருக்கு ஆபத்து இல்லை: ஒன்றிய அமைச்சர் விளக்கம்

போர்ட்பிளேர்: ஒன்றிய அரசு அறிவித்துள்ள தீவுகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் கிரேட் நிகோபார் தீவை முழுமையாக மேம்படுத்தும் வகையில் ரூ.72 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் கிரேட் நிகோபார் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி கலாத்தியா விரிகுடாவில் மிகப்பெரிய சரக்கு பெட்டக துறைமுகம், விமான நிலையம், மின்சார உற்பத்தி நிலையம் மற்றும் அந்தமான், நிகோபார் தீவுகளில் பசுமை வயல் நகரம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் பல்வேறு அரிய வகை உயிரினங்கள் அழியும், பழங்குடிகளின் இருப்பிடம் பறிக்கப்படும் என்பதால் திட்டத்தை செயல்படுத்த பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஒன்றிய பழங்குடியின விவகாரத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா, “ஷோம்பென் பழங்குடியினரின் புனிததன்மையை பாதுகாக்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும்” என்று தெரிவித்தார்.

The post கிரேட் நிகோபார் திட்டத்தால் பழங்குடியினருக்கு ஆபத்து இல்லை: ஒன்றிய அமைச்சர் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Aborigines ,Union ,Portblair ,Great Nicobar ,Government of the Union ,
× RELATED அமெரிக்கா-ஈரான் நாடுகளில் பிடித்து...