×

தமிழ்நாடு, கர்நாடகாவில் 2 புதிய வகை சிலந்திகள் கண்டுபிடிப்பு

கொல்கத்தா: இந்திய விலங்கியல் ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தென்னிந்தியாவில் இருந்து 2 புதிய வகை குதிக்கும் சிலந்திகளை கண்டுபிடித்துள்ளனர். புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இரண்டு புதிய வகை சிலந்திகளில் ஒன்று தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு ‘ஃபின்டெல்லாப்லட்னிக்கி‘ என்று பெயரிடப்பட்டுள்ளது. மற்றொன்று கர்நாடக மாநிலம் மூகாம்பிகா வனவிலங்கு சரணாலயத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு ‘ஃபின்டெல்லத்ரிட்டி‘ என பெயரிடப்பட்டுள்ளது. 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இந்திய விலங்கியல் கணக்கெடுப்பு மையத்தின் முதல் பெண் இயக்குநர் டாக்டர். த்ரிடி பானர்ஜியின் நினைவாக ‘ஃபின்டெல்லத்ரிட்டி‘ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு, கர்நாடகாவில் 2 புதிய வகை சிலந்திகள் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu, Karnataka ,Kolkata ,Indian Zoological Research Center ,South India ,
× RELATED கொல்கத்தாவில் 21 மணி நேரம் விமான சேவை ரத்து