×

காரில் ஆயுதங்களுடன் சுற்றிய ஐஜேகே நிர்வாகி உள்பட 5 பேர் கைது

திருப்பூர்: திருப்பூர் போயம்பாளையம் பகுதியில் அனுப்பர்பாளையம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வந்த காரை மறித்து சோதனை செய்தபோது, 20 மது பாட்டில்கள், 3 இரும்பு ராடு, 1 பட்டாக்கத்தி, 2 கத்தி மற்றும் அரிவாள் இருந்தன. விசாரணையில், அவர்கள் நல்லூர் விஜிபி கார்டன் பகுதியை சேர்ந்த முத்துக்குமார் (37), ஆனந்த் (40), கதிரேசன் (34), பழனிக்குமார் (37), ராஜ்குமார் (39) என்பதும்,
முத்துக்குமார் இந்திய ஜனநாயக கட்சியின் (ஐஜேகே) மாநகர தலைவர். போயம்பாளையம் பகுதியில் கட்சி நிர்வாகிகள் சிலரிடையே முன் விரோதம் இருந்து வந்ததாகவும், கட்சி நோட்டீசில் சிலரின் பெயரை தவிர்த்துவிட்டு அச்சடித்ததால் எதிர்ப்பு கிளம்பியதாகவும், இருப்பினும் முத்துக்குமார் அந்த நோட்டீசை திருப்பூர் மாநகரில் ஒட்டியதாகவும் தெரிகிறது. எதிர்ப்பு தெரிவிப்பவர்களை தாக்குவதற்கு ஆயுதங்களுடன் சுற்றி வந்ததும் தெரியவந்தது. 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

The post காரில் ஆயுதங்களுடன் சுற்றிய ஐஜேகே நிர்வாகி உள்பட 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : IJK ,Tirupur ,Pattarpalayam Police ,Boyampalayam ,
× RELATED திருப்பூர் மண்டல போக்குவரத்து பொது மேலாளர் சஸ்பெண்ட்