×

குருவாயூர்- சென்னை வரை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் இன்று மாற்றுப்பாதையில் இயக்கம்

நெல்லை: மதுரை கோட்ட ரயில்வேக்கு உள்பட்ட பகுதிகளில் சுரங்கப்பாதை பணிகள் நடப்பதால் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்றும், 16ம் தேதியும் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை கோட்ட ரயில்வேக்கு உட்பட்ட கோவில்பட்டி – குமாரபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில்வே கேட்டுகள் அருகே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிக்காக அந்த வழியாக இயக்கப்படும் ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கோவை – நாகர்கோவில் (16322) எக்ஸ்பிரஸ் ரயில் நாளை மற்றும் 17ம் தேதிகளில் திண்டுக்கல் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும்.
நாகர்கோவிலில் இருந்து காலை 7.35 மணிக்கு புறப்படும் நாகர்கோவில் – கோவை எக்ஸ்பிரஸ் (16321) நாளை மற்றும் 17ம் தேதிகளில் மட்டும் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும். இந்த ரயிலுக்கான சேவை நாகர்கோவில் – திண்டுக்கல் இடையே இருக்காது.

சென்னை தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் தாம்பரம்-அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் (20691) இன்று மற்றும் 16ம் தேதிகளில் திருச்சி வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் நாகர்கோவில்-தாம்பரம் அந்தியோதயா ரெயில் (20692) நாளை மற்றும் 17ம் தேதிகளில் திருச்சியில் இருந்து வழக்கமான நேரத்தில் புறப்பட்டு செல்லும். திருச்சி- நாகர்கோவில் இடையே பகுதி தூரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூர்-பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் (16732) நாளை 3ம் தேதி மற்றும் 17ம் தேதிகளில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து பாலக்காடு புறப்படும். பாலக்காடு-திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (16731) நாளை மற்றும் 17ம் தேதிகளில் திண்டுக்கல் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். திண்டுக்கல் முதல் திருச்செந்தூர் வரை பகுதி தூரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் (22627) நாளை மற்றும் 17ம் தேதிகளில் விருதுநகர் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். மறுமார்க்கத்தில் திருவனந்தபுரம்-திருச்சி இடையேயான இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (22628) நாளை மற்றும் 17ம் தேதிகளில் விருதுநகர் ரயில் நிலையத்தில் இருந்து திருச்சி புறப்பட்டு செல்லும்.குருவாயூரில் இருந்து சென்னை வரை இயக்கப்படும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் (16128) இன்று மற்றும் 16ம் தேதிகளில் நெல்லையில் இருந்து தென்காசி வழியாக விருதுநகருக்கு செல்லும். அதாவது மணியாச்சி, கோவில்பட்டி, சாத்தூர் ஆகிய ரயில் நிலையங்களுக்கு செல்லாது.

The post குருவாயூர்- சென்னை வரை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் இன்று மாற்றுப்பாதையில் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Express ,Chennai ,Madurai Gotta Railway ,Guruvayur ,
× RELATED கோயம்புத்தூர் ஜன் சதாப்தி ரயிலை...