×

மது குடிக்க கட்டாயப்படுத்தி நடிகையை பலாத்காரம் செய்ய முயற்சி: மாஜி டிஎஸ்பி மீது வழக்குப்பதிவு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் காசர்கோடு அருகே ஒரு ஆல்பத்தில் நடிக்க வந்த கொல்லத்தை சேர்ந்த நடிகையை தனது அறைக்கு அழைத்து வந்து கட்டாயப்படுத்தி மது குடிக்க வைக்கவும், பலாத்காரம் செய்யவும் முயற்சித்த ஓய்வு பெற்ற டிஎஸ்பி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கேரள மாநிலம் காசர்கோடு அருகே உள்ள திருக்கரிப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மதுசூதனன் (58). ஓய்வு பெற்ற டிஎஸ்பி. இவர் ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’, தொண்டி முதலும் திருக்சாட்சியும் உள்பட ஒரு சில மலையாளப் படங்களில் நடித்தும் உள்ளார். இந்தநிலையில் ஒரு மலையாள ஆல்பத்தில் நடிப்பதற்காக அவரை ஒப்பந்தம் செய்து இருந்தனர். இதற்காக காசர்கோடு அருகே பேக்கல் என்ற இடத்தில் உள்ள ஒரு விடுதியில் தங்கி இருந்தார்.

அதே விடுதியில் அந்த ஆல்பத்தில் நடிக்கும் கொல்லத்தை சேர்ந்த நடிகை ஒருவருக்கும் அறை ஒதுக்கப்பட்டு இருந்தது. அவரும் ஒரு சில மலையாளப் படங்களில் நடித்து இருக்கிறார். இதற்கிடையே கடந்த 3 நாட்களுக்கு முன் இரவில் மதுசூதனன், அந்த நடிகையை தனது அறைக்கு வருமாறு அழைத்துள்ளார். நடிகையும் அவரது அறைக்கு சென்று உள்ளார். அப்போது மதுசூதனன், அந்த நடிகையை மது குடிக்குமாறு வற்புறுத்தி இருக்கிறார். பின்னர் அவரை பலாத்காரம் செய்யவும் முயற்சித்து உள்ளார். இதை சற்றும் எதிர்பாராத நடிகை அதிர்ச்சி அடைந்தார். உடனே அந்த நடிகை அறையில் இருந்து தப்பி வெளியே ஓடினார். பின்னர் இது குறித்து பேக்கல் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் மாஜி டிஎஸ்பி மதுசூதனன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மது குடிக்க கட்டாயப்படுத்தி நடிகையை பலாத்காரம் செய்ய முயற்சி: மாஜி டிஎஸ்பி மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Kollam ,Kasargod ,Kerala ,
× RELATED புரோட்டா சாப்பிட்ட 5 பசுக்கள் பலி