×

மைசூரு தேர்தல் பிரசாரத்தின் போது மோடியின் ‘கான்வாய்’ மீது செல்போன் வீச்சு: பாஜக பெண் உறுப்பினரிடம் விசாரணை

மைசூரு: மைசூருவில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது மோடியின் கான்வாய் மீது பாஜக பெண் உறுப்பினர் ஒருவர் செல்போனை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கர்நாடகா சட்டப் பேரவை தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதமர் மோடி நேற்று தனது இரண்டாவது நாள் மெகா ரோட்ஷோ மற்றும் தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டார். மைசூருவில் மட்டும் ஆறு பேரணி, ஒரு ரோட்ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்றார். மைசூருவில் நடந்த பேரணியின் போது, அவரது கான்வாய் (பிரசார வாகனம்) மீது சாலையோரம் நின்றிருந்த மக்கள் பூக்களை வீசிக் கொண்டிருந்தனர்.

எதிர்பாராத விதமாக கூட்டத்தினுள் இருந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், தனது கையில் வைத்திருந்த செல்போனை மோடியை நோக்கி வீசினார். உடனடியாக மோடியின் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அந்த செல்போனை கைப்பற்றினர். காவல்துறையினரின் ெதாடர் விசாரணையில், பாஜக பெண் உறுப்பினர் ஒருவர், பிரதமர் மோடிக்கு பூக்களை வீசியபோது தற்செயலாக அவரது செல்போனும் வீசிவிட்டதாக கூறப்படுகிறது.

உற்சாகத்தின் மிகுதியால் செல்போனை வீசிவிட்டதாகவும், மற்றபடி தவறான எண்ணம் ஏதும் அந்தப் பெண்ணுக்கு இல்லை என்று கூடுதல் காவல்துறை இயக்குநர் (சட்டம் – ஒழுங்கு) அலோக் குமார் கூறினார். தொடர் விசாரணைக்கு பின்னர், அந்த செல்போனை மீண்டும் அந்தப் பெண்ணிடம் போலீசார் கொடுத்தனர்.

The post மைசூரு தேர்தல் பிரசாரத்தின் போது மோடியின் ‘கான்வாய்’ மீது செல்போன் வீச்சு: பாஜக பெண் உறுப்பினரிடம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Modi's' ,Mysore ,Bajaka ,Modi ,Dinakaran ,
× RELATED பிரதமர் நரேந்திர மோடியின் ‘முஜ்ரா’ பேச்சு: தலைவர்கள் கடும் கண்டனம்