×

கேரளாவில் மது குடிக்க கட்டாயப்படுத்தி நடிகையை பலாத்காரம் செய்ய முயற்சி: மாஜி டிஎஸ்பி மீது வழக்குப்பதிவு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் காசர்கோடு அருகே உள்ள திருக்கரிப்பூர் பகுதியை சேர்ந்தவர் மதுசூதனன் (58). ஓய்வு பெற்ற டிஎஸ்பி. ஆண்ட்ராய்டு குஞ்சப்பன், தொண்டி முதலும் திருக்சாட்சியும் உள்பட ஒரு சில மலையாள படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் ஒரு மலையாள ஆல்பத்தில் நடிப்பதற்காக அவரை ஒப்பந்தம் செய்திருந்தனர். இதற்காக காசர்கோடு அருகே பேக்கல் என்ற இடத்தில் உள்ள ஒரு விடுதியில் தங்கி இருந்தார்.

அதே விடுதியில் அந்த ஆல்பத்தில் நடிக்கும் கொல்லத்தை சேர்ந்த நடிகை ஒருவருக்கும் அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அவரும் ஒரு சில மலையாள படங்களில் நடித்திருக்கிறார். இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவில் மதுசூதனன், அந்த நடிகையை தனது அறைக்கு வருமாறு அழைத்துள்ளார். அதைத்தொடர்ந்து நடிகையும் அவரது அறைக்கு சென்றுள்ளார்.

அப்போது மதுசூதனன், அந்த நடிகையை மது குடிக்குமாறு வற்புறுத்தி இருக்கிறார். பின்னர் அவரை பலாத்காரம் செய்யவும் முயற்சித்துள்ளார். இதை சற்றும் எதிர்பாராத நடிகை அதிர்ச்சியடைந்தார். உடனே அந்த நடிகை அறையில் இருந்து தப்பி வெளியே ஓடினார். பின்னர் இதுகுறித்து பேக்கல் போலீசில் புகார் செய்தார். மாஜி டிஎஸ்பி மதுசூதனன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கேரளாவில் மது குடிக்க கட்டாயப்படுத்தி நடிகையை பலாத்காரம் செய்ய முயற்சி: மாஜி டிஎஸ்பி மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Kerala ,Maji ,DSP ,Thiruvananthapuram ,Madhussuthanan ,Tirukkarippur ,Kasargod ,Dinakaran ,
× RELATED சந்தன கட்டை கடத்திய கேரளாவை சேர்ந்த 6 பேர் கைது..!!