×

தொழிலாளி வீட்டில் தங்க நகை திருட்டு

 

களக்காடு, மே 1: களக்காடு அருகே மலையடிப்புதூர் பருத்திவிளை தெருவைச் சேர்ந்தவர் இசக்கி பாண்டி (37). கூலி தொழிலாளியான இவர், சம்பவத்தன்று காலை வீட்டை பூட்டிவிட்டு வேலைக்குச் சென்றார். மாலை திரும்பியபோது வீட்டின் கதவு திறந்துக் கிடந்தது கண்டு பதறினார். உள்ளே சென்றபோது பீரோவில் வைத்திருந்த ஒரு பவுன் எடையிலான தங்க கம்மல்கள் திருடு போனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து திருக்குறுங்குடி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப் பதிந்த போலீசார், மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்

The post தொழிலாளி வீட்டில் தங்க நகை திருட்டு appeared first on Dinakaran.

Tags : Kalakadu ,Izakki Pandi ,Malaadipudur Baruthivlai Street ,
× RELATED விடுமுறை தினம் என்பதால் களக்காடு தலையணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்