×

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தூர்வாரும் பணி: கலெக்டர் ஆய்வு

 

நாகப்பட்டினம், மே1: நாகப்பட்டினம் மாவட்டத்தில் தூர்வாரும் பணிகளை கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு செய்தார்.திருமருகல் ஒன்றியம் பண்டாரவடை ஊராட்சி தென்பிடாகை வடிகால் வாய்க்கால் 3 ஆயிரம் மீட்டர் மற்றும் தண்டாளம் வடிகால் வாய்க்கால் 3 ஆயிரம் மீட்டர் தூரம் வரை ரூ.8 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணிகள் நடைபெறுகிறது. இந்த வடிகால் வாய்க்காலின் மூலம் தென்பிடாகை, தண்டாளம் கிராமத்தில் 471 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இவ்வாய்க்காலின் படுக்கை தளம் 3 மீட்டர் ஆகும். தற்போது வடிகால் வாய்க்காலில் வண்டல் படிந்து காட்டாமணக்கு செடிகள் மண்டி நீர் போக்கினை வெகுவாக தடுத்து விடுவதால் வெள்ள காலங்களில் வாய்க்காலில் வெள்ளநீர் வடியாமல் தேங்குவதால் கரைகள் பாதிக்கப்பட்டு கரை உடைப்பு மற்றும் கரைப்பொழிவுகள் ஏற்பட்டு பெரும் சேதத்தை விளைவிக்கிறது.

எனவே தென்பிடாகை வடிகால் வாய்க்கால் மற்றும் தண்டாளம் வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படுகிறது. அதே போல் கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியம் ஓர்குடி ஊராட்சி பகுதிகளில் தேவநதி வாய்க்கால் 4 கிலோ மீட்டர் முதல் 7 கிலோமீட்டர் வரையும், தெத்தி வடிகால் 3 கிலோ மீட்டர் வரை ரூ. 16 லட்சம் மதிப்பீல் தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது. இதை பார்வையிட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் கூறியதாவது: இந்த வாய்க்கால்கள் தூர்வாரும் பணி அவசியம் கருதி பாசன காலங்களில் பாசன நீரை போதிய கால அவகாசத்தில் இப்பகுதி விளை நிலங்களுக்கு பங்கீடு செய்ய இயலாமல் போகின்றது. இதனால் நெற்பயிற்களுக்கு போதிய அளவு பாசன நீர் கிடைக்காமல் கருகும் அபாயம் உள்ளது. இப்பகுதியில் உள்ள கரைகளில் உடைப்பு மற்றும் கரைப்பொழிவுகள் போன்ற நிகழ்வுகளை தடுக்கும் வகையில் இவ்வாய்க்கால் தூர்வாரப்படுகிறது என்றார். திருமருகல் வட்டார ஆத்மா குழு தலைவர் செல்வசெங்குட்டுவன், உதவி செயற்பொறியாளர் செல்வராகவன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

The post நாகப்பட்டினம் மாவட்டத்தில் தூர்வாரும் பணி: கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Nagapattinam District ,Nagapattinam ,Collector ,Arunthamburaj ,Tirumarugal Union ,Bandaravadai Panchayat South Pitagai ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினம் மாவட்டத்தில் அக்னிவீர்...