×

முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம்

 

மேட்டூர், மே 1: மேச்சேரி வடக்கு ஒன்றிய பாமக சார்பில். வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு கோரி தமிழக முதல்வருக்கும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை தலைவருக்கும் கடிதம் அனுப்பும் போராட்டம் நேற்று நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு வடக்கு ஒன்றிய செயலாளர் அக்னி சுதாகர் தலைமை வகித்தார். சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன், தலைவர் டாக்டர் மாணிக்கம், வன்னியர் சங்க மேற்கு மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். இப்போராட்டத்தை சதாசிவம் எம்எல்ஏ துவக்கி வைத்தார். தெத்திகிரிபட்டி அஞ்சலகத்தில் இருந்து 500 கடிதங்கள் அஞ்சலிடப்பட்டன. மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ரேவதி ராஜசேகரன், ஊராட்சி மன்றத் தலைவர் நல்லதம்பி, கண்ணன், ரவிக்குமார், ரத்தினவேல் கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post முதல்வருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Matour ,Macheri North Union Bambaka ,Dinakaran ,
× RELATED எந்தக் கிரகம் நல்லது செய்யும்?