×

நகராட்சி பூங்காவில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் எம்எல்ஏ திறந்து வைத்தார்

 

விருதுநகர்: நகராட்சி பூங்காவில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தினை ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் எம்எல்ஏ திறந்து வைத்தார். விருதுநகரில் நமக்கு நாமே திட்டத்தில் ரூ.75 லட்சம் செலவில்11 இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு மையங்கள், 9 இடங்களில் மினி ஹைமாஸ் விளக்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பாத்திமாநகர், பர்மா காலனி 3வது தெரு, மேற்கு பாண்டியன் காலனி, ஏடிபி காம்பவுண்ட், பி1பி1 ரோடு, பெரிய பள்ளி வாசல், எல்பி சண்முகம் தெரு, குருசாமி கொத்தனார் தெரு, தெற்குரத வீதி, அகமதுநகர் வட்டார் டேங்க், படேல் ரோடு பார்க் மேல்நிலைத்தொட்டி வளாகம் ஆகிய 11 இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படுகிறது.

முதல் கட்டமாக அகமதுநகர் மேல்நிலைத்தொட்டி அருகில் கடந்த மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. படேல் ரோடு பார்க்கில் உள்ள மேல்நிலைத்தொட்டி அருகில் நேற்று 2வது சுத்திகரிப்பு நிலையத்தை ரோட்டரி முன்னாள் ஆளுநர் ஆடிட்டர் முருகதாஸ் தலைமையில் நகர்மன்ற தலைவர் மாதவன் முன்னிலையில் எம்எல்ஏ ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பாணித்தார். குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஒரு மணி நேரத்திற்கு ஆயிரம் லிட்டர் குடிநீர் உற்பத்தி திறன் உடையது. இதன் மூலம் படேல் ரோடு, அதை சுற்றிய குடியிருப்புகள், நிறுவனங்கள், மருத்துவமனை நோயாளிகள் பயன்பெறுவர். மீதமுள்ள 9 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள், கவுன்சிலர் வெங்கடேஷ் மற்றும் பலர் பங்கேற்றனர்.

The post நகராட்சி பூங்காவில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் எம்எல்ஏ திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : MLA ,Virudhunagar ,ARR ,Srinivasan ,
× RELATED விருதுநகர் அருகே இருசக்கர வாகனத்தின்...