×

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை அய்யனார் கோவில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

ராஜபாளையம்: மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையால் அய்யனார் கோவில் ஆற்றில் ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் நகர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு நகர் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் நல்ல மழை பெய்தது. இதனால் நள்ளிரவில் அய்யனார் கோவில் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ராஜபாளையத்துக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய ஆறாவது மைல் நீர் தேக்கத்திற்கு தண்ணீர் வரத்தும் அதிகரித்து வருகிறது. இதனால் ராஜபாளையம் பகுதி மக்களின் குடிநீர் பஞ்சம் தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கோடையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் மழை பெய்த்தால் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பள்ளி விடுமுறை என்பதால் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

The post மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை அய்யனார் கோவில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Western Ghats ,Aiyanar temple river ,Rajapalayam ,Ayyanar temple ,Virudhunagar district ,Rajapalayam Nagar ,Dinakaran ,
× RELATED திருவில்லிபுத்தூர் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் கனமழை