×

பிடாரிச்சேரியில் புதிய ரேஷன் கடை பணி துவக்கம்

பரமக்குடி: பார்த்திபனூர் அருகே உள்ள பிடாரிச்சேரியில் ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்டும் பணியினை எம்எல்ஏ முருகேசன் தொடங்கி வைத்தார். பரமக்குடி மேற்கு ஒன்றியம் பார்த்திபனூர் அருகே பிடாரிச்சேரியில் புதிய ரேஷன் கடையை கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் சார்பாக எம்எல்ஏ முருகேசன் இடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதற்கான பூமி பூஜையை எம்எல்ஏ முருகேசன் நேற்று துவக்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பிடாரிச்சேரி ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வி ரவி, கிளை செயலாளர்கள் வேல் முருகன், பாலமுருகன், மலைராஜ், ராஜேந்திரன், பஞ்சாசரம் மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post பிடாரிச்சேரியில் புதிய ரேஷன் கடை பணி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Pitoricherry ,Paramakudi ,MLA ,Murugesan ,Pitarichary ,Parthibanur ,Pitaricherry ,Dinakaran ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி