×

அதிமுக உறுப்பினர் சேர்க்கை ஆர்.பி.உதயகுமார் பங்கேற்பு

 

திருமங்கலம்: திருமங்கலம் தொகுதியில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடந்தது. மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தில் திருமங்கலம், சோழவந்தான் மற்றும் உசிலம்பட்டி ஆகிய மூன்று தொகுதிகளில் கடந்த சில தினங்களாக அதிமுக உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் திருமங்கலம் ஒன்றிம் கீழஉரப்பனூரில் புதிய உறுப்பினர் சோ்க்கை முகாமில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பேசுகையில், அதிமுகவில் கட்சிக்கு விஸ்வாசமாக உழைத்தால் கிளை செயலாளர் கூட முக்கிய கட்சி பதவிக்கு வர இயலும். கட்சியின் நிறுவனத்தலைவர் எம்ஜிஆர் காலத்தில் 35 லட்சம் உறுப்பினர்கள் இருந்தனர்.

அதனை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒன்றரைக்கோடியாக மாற்றினார். தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரண்டரை கோடி உறுப்பினர்களை இணைக்கும்படி உத்தரவிட்டு செயலாற்றி வருகிறார். குடும்பத்தில் உள்ளவர்களை மட்டுமின்றி, புதிய வாக்காளர்களையும் கட்சியில் இணைக்கவேண்டும் என்றார். கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் அன்பழகன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் தமிழழகன், பொருளாளர் திருப்பதி, நகர செயலாளர் விஜயன், பொதுக்குழு உறுப்பினர் சுமதி சாமிநாதன், திருமங்க்லம் யூனியன் சேர்மன் லதாஜெகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post அதிமுக உறுப்பினர் சேர்க்கை ஆர்.பி.உதயகுமார் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,RB Udayakumar ,Tirumangalam ,Madurai ,RP Udayakumar ,Dinakaran ,
× RELATED எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி...