×

கொடைரோடு தேவாலயத்தில் கூடுதல் கட்டிடம் திறப்பு விழா

 

நிலக்கோட்டை: நிலக்கோட்டை அடுத்த கொடைரோட்டில் மதுரை- ராமநாதபுரம் தென்னிந்திர திருச்சபை (சிஎஸ்ஐ) பேராயத்திற்குட்பட்ட ஜெயராஜ் ஞாபகார்த்த தேவாலயத்தின் 60வது ஆண்டு விழாவையொட்டி கூடுதல் முகப்பு கட்டிடம் திறப்பு விழா மற்றும் அசன பண்டிகை ஆராதனை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கொடைரோடு குருசேகர தலைவர் பிரபுதாஸ் தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக பேராயத்தின் பேராயர் ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் கலந்து கொண்டு, புதிய முகப்பு கட்டிடத்தை திறந்து வைத்து சிறப்பு கூட்டு பிரார்த்தனை நடத்தினார். இதில் குருசேகர துணை தலைவர் ரூல்ஸ்வெல்ட், வட்டகை மன்ற தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் ஆயர்கள், இறைமக்கள் என பலர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகள், இனிப்புகள், அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

The post கொடைரோடு தேவாலயத்தில் கூடுதல் கட்டிடம் திறப்பு விழா appeared first on Dinakaran.

Tags : Kodairod Church ,Nilakottai ,Jayaraj Memorial Church ,Archdiocese of Madurai- Ramanathapuram Southern India ,CSI ,Kodairod ,
× RELATED தொடர்மழை காரணமாக பூத்துக் குலுங்கும்...