×

சேரங்கோடு பகுதியில் ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் விநியோகம்

 

பந்தலூர்: பந்தலூர் அருகே சேரங்கோடு பகுதியில் ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் விநியோகம் செய்ய சேரங்கோடு ஊராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட சேரங்கோடு பஜார் பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கோடை காலத்தில் குடிநீர் பிரச்னை நிலவி வருவதால் தீர்வு ஏற்படுத்தவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில் 5 ஆண்டுக்கு முன்பு போடப்பட்ட ஆழ்துளை கிணற்றை மக்கள் பயன்பெறும் வகையில் சேரங்கோடு ஊராட்சி சார்பில் புதியதாக மின் மோட்டார் வைத்து மின் இணைப்பு ஏற்படுத்தி, குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நடவடிக்கை எடுத்த ஊராட்சி மன்றத்தலைவர் லில்லி மற்றும் துணைத்தலைவர் சந்திரபோஸ், வார்டு உறுப்பினர் முத்துசாமி மற்றும் ஊராட்சி செயலர் சஜீத் ஆகியோருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

The post சேரங்கோடு பகுதியில் ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் விநியோகம் appeared first on Dinakaran.

Tags : Cherangode ,Pandalur ,Serangodu Panchayat ,Cherangodu ,Bandalur ,Dinakaran ,
× RELATED கோடை வெயிலின் தாக்கம்: கருகும் தேயிலை செடிகள்