×

கிருஷ்ணகிரி ஆணவ படுகொலை விவகாரம் கைதான இருவரை ஒருநாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஜெகன் என்பவர் அதே பகுதியை சேர்ந்த சரண்யாவை காதலித்து வந்தார். தம்முடைய எதிர்ப்பை மீறி மகளை திருமணம் செய்து கொண்டதால் ஜெகனை சரண்யாவின் தந்தை சங்கர் மற்றும் அவரது உறவினர்கள் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். சம்பவம் தொடர்பாக சரண்யாவின் தந்தை சங்கரை போலீசார் கைது செய்த நிலையில், உடந்தையாக இருந்த நாகராஜ், முரளி ஆகியோர் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.நீதிமன்ற காவலில் உள்ள அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி 15 நாட்கள் நீதிமன்ற காவல் நிறைவடைவதற்கு முன்பாக காவல்துறை மனு தாக்கல் செய்தது.

ஆனால் 15 நாட்கள் நீதிமன்ற காவல் நிறைவடைந்து விட்டதால் போலீஸ் காவலுக்கு அனுமதிக்க முடியாது என கூறி காவல் துறையின் மனுவை கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து காவல்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்த போது ஆஜரான குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர், இந்த சம்பவத்தில் முதல் குற்றவாளியான தந்தையிடம் காவல்துறையினர் ஏற்கனவே விசாரணை நடத்திவிட்டதால் இருவரிடமும் விசாரணை நடத்த தேவையில்லை என கூறினார். அரசு தரப்பில் வழக்கறிஞர் சந்தோஷ் ஆஜராகி, 15 நாட்கள் நீதிமன்ற காவல் முடிவடைவதற்கு முன்பே போலீஸ் காவல் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் உத்தரவு பிறப்பிப்பதில் நீதிபதி காலதாமதம் செய்தார். குற்றத்தை தன்மையை கருதி மனு தாக்கல் செய்த அன்றைய தினமே மனு மீது முடிவெடுத்திருக்க வேண்டும் என்று வாதிட்டார். காவல்துறை வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இருவரையும் ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு அனுமதி வழங்குமாறு கிருஷ்ணகிரி நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார். பெற்றோருக்கும் வரும் என கூறப்பட்டுள்து. இந்த வழக்கை பொறுத்தவரை தம்பதிக்கு விவாகரத்து ஆகிவிட்டதால் பாக்கி தொகையை பெற சரஸ்வதியின் தாயாருக்கு உரிமை உள்ளது என கூறி, வழக்கில் ஜெயாவை இணைத்து மதுராந்தம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதிசெய்ததுடன், அண்ணாதுரையின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

The post கிருஷ்ணகிரி ஆணவ படுகொலை விவகாரம் கைதான இருவரை ஒருநாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி: சென்னை ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Krishnagiri Aramava massacre ,Chennai ,Jegan ,Krishnagiri district ,Saranya ,iCort ,
× RELATED முள்ளம்பன்றி தாக்கியதால் மரணம்;...