×

மைசூர் வன உயிரின பூங்கா மற்றும் மீட்பு மையத்தில் T23 புலிக்கு இன்று முதல் சிகிச்சை.: வனத்துறை அதிகாரிகள் தகவல்

மைசூர்: மைசூர் வன உயிரின பூங்கா மற்றும் மீட்பு மையத்தில் T23 புலிக்கு இன்று முதல் சிகிச்சை அளிக்கப்படுவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நீலகிரியில் பிடிக்கப்பட்ட T23 புலி நேற்றிரவு மைசூர் வன உயிரின பூங்கா மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தமிழக மருத்துவ குழுவினர் புலியுடன் சென்று மைசூர் வனத்துறையிடம் ஓப்படைத்தனர். இந்நிலையில், மைசூர் விலங்குகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் புலியை ஒப்படைத்த பின் தமிழக  வனத்துறை குழுவினர் நீலகிரி திரும்பினர். புலியின் உடலில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் காயங்கள் இருக்கும் நிலையில் அதற்கு சிகிச்சை அளிக்கும் பணியானது நடைபெறவுள்ளது.நள்ளிரவில் T23 புலி மயக்கம் தெளிந்து, கூண்டில் இருந்து வெளியே வர முற்பட்டது. கூண்டில் இருந்து வெளியே வர முடியாத நிலையில் கூண்டில் புலி ஆவேசத்துடன் இருக்கின்றது. இந்நிலையில் T23 புலி மயக்கம் தெளிந்து நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் புலியின் உடல்களில் இருக்கும் காயங்களுக்கு இன்று முதல் மைசூரில் உள்ள விலங்குகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை அளிக்கப்படும் என்று முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் தெரிவித்துள்ளார். …

The post மைசூர் வன உயிரின பூங்கா மற்றும் மீட்பு மையத்தில் T23 புலிக்கு இன்று முதல் சிகிச்சை.: வனத்துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Mysore Wildlife ,Park and Rescue Center ,Mysore ,Mysore Wildlife Park and Rescue Center ,Forest Department ,Dinakaran ,
× RELATED சத்தியமங்கலம் பண்ணாரி அருகே கடும்...