×

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் 4வது சுற்றில் ஆண்ட்ரீவா

மாட்ரிட்: ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் விளையாட, ரஷ்யாவின் மிர்ரா ஆண்ட்ரீவா (15வயது) தகுதி பெற்றுள்ளார்.
3வது சுற்றில் போலந்து வீராங்கனை மேக்தா லினெட்டுடன் (31 வயது, 19வது ரேங்க்) மோதிய ஆண்ட்ரிவா (194வது ரேங்க்) 6-3, 6-3 என்ற நேர் செட்களில் எளிதாக வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். முந்தைய சுற்றுகளில் அவர் கனடாவின் லெய்லா பெர்னாண்டஸ் (20 வயது, 38வது ரேங்க்), பிரேசிலின் ஹதாத் மாயா (26வயது, 14வது ரேங்க்) ஆகியோரை வீழ்த்தினார். டபிள்யூஏ தொடர் ஒன்றில் முதல் முறையாக விளையாடும் ஆண்ட்ரீவா சிறப்பு அனுமதியின் மூலம் வாய்ப்பு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 4வது சுற்றில் உலகின் 2ம் நிலை வீராங்கனை பெலாரசின் அரினா சபலென்கா (24 வயது) உடன் மோதுகிறார்.

The post மாட்ரிட் ஓபன் டென்னிஸ் 4வது சுற்றில் ஆண்ட்ரீவா appeared first on Dinakaran.

Tags : Andreeva ,Madrid Open ,Madrid ,Women's Singles Division ,Spain ,Mirra ,Russia ,Madrid Open Tennis ,Andreva ,Dinakaran ,
× RELATED சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்