×

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

சென்னை: வடசென்னை அனல் மின் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, மீண்டும் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதித்தது. திருவள்ளூர் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் உள்ளது வடசென்னை அனல் மின் நிலையம். இங்குள்ள, முதலாவது நிலையில் மூன்று அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தியும், 2வது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தி என மொத்தம் 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 2வது நிலையின் 2வது அலகில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும், 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணிகளில் மின் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

The post வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Vadasennai Thermal Power Station ,Chennai ,Vadashennai ,Thermal ,Power ,Station ,Thiruvallur ,Vadasennai Thermal ,Dinakaran ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...