×

குனோவில் சிவிங்கி புலிகளுக்கு போதுமான இடம் இல்லை: முன்னாள் அதிகாரி குற்றச்சாட்டு

போபால்: குனோ தேசிய பூங்காவில் சிவிங்கி புலிகளுக்கு போதுமான இடம் இல்லை என்று வனவிலங்குகள் மையத்தின் முன்னாள் அதிகாரி தெரிவித்துள்ளார்.மத்திய பிரதேச மாநிலம் குனோ தேசிய பூங்காவுக்கு நமீபியாவில் இருந்து எட்டு சிவிங்கி புலிகளும், தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கி புலிகளும் கொண்டு வரப்பட்டுள்ளன. குனோ தேசிய பூங்காவில் கடந்த ஒரு மாதத்தில் 2 சிவிங்கி புலிகள் இறந்துள்ளன. இந்நிலையில், இந்திய வனவிலங்குகள் மையத்தின் முன்னாள் டீன் ஆன யாதவேந்திரதேவ் விக்ரம் சிங் ஜாலா கூறுகையில் குனோ தேசிய பூங்காவில் ஆப்ரிக்க சிவிங்கி புலிகளின் நடமாட போதுமான இடம் இல்லை. குனோ தேசிய பூங்கா 750 சதுர கிமீ பகுதியாகும்.

ஒரு சிறுத்தையின் நடமாட்டத்துக்கு குறைந்தது 100 சதுர கிமீ தேவை. எனவே அவைகளுக்கு 750 சதுர கிமீ இடம் போதுமானது இல்லை.அதன் அருகே விவசாய விளை நிலங்கள், குடியிருப்பு இடங்கள் உள்ளன. இந்த சூழ்நிலையில் சிறுத்தைகள் வாழ்வதற்கு பழகிக்கொண்டால் அவற்றின் இனப்பெருக்கம் அதிகமாக வாய்ப்பு உள்ளது’’ என்றார். இதற்கிடையே, சிறுத்தைகளுக்கு மாற்று இடம் வழங்கக்கோரி தேசிய புலிகள் காப்பக ஆணையகத்துக்கு மபி வனத்துறை கடிதம் எழுதியுள்ளது. ஆனால் இதற்கு இன்னும் பதில் வரவில்லை என அதிகாரி தெரிவித்தார்.

The post குனோவில் சிவிங்கி புலிகளுக்கு போதுமான இடம் இல்லை: முன்னாள் அதிகாரி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Kuno ,Bhopal ,Kuno National Park ,
× RELATED காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்...