×

பிரதமர் மோடியின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சி: தமிழ்நாட்டு பழங்குடியின பெண்களை குறித்து பெருமிதம்

டெல்லி: 100 வது மனதின் குரல் வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி மண் குவளைகளை தயாரித்து விற்கும் தமிழ்நாட்டு பழங்குடியின பெண்களை குறித்து பெருமிதம் தெரிவித்தார். மோடி பிரதமராக பொறுப்பேற்ற 2014-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு மாததின் கடைசி ஞயிற்று கிழமைகளில் மனதின்குரல் என்ற வானொலி நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார்.

இதில் தொழில்நுட்பம், சமூக மேம்பாடு, பெண்களுக்கு அதிகாரம் அளித்த உள்ளிட்ட தலைப்புகளில் பேசும் அவர், மாநிலம் வாரியாக சாதனையாளர்களின் செயலையும் பட்டியலிட்டு வருகிறார். அந்த வகையில் இன்று ஒளிபரப்பபட்ட 100-வது மனதின் குரல் நிகழ்ச்சிக்காக கட்சி அலுவலகங்கள் பொதுமக்கள் கூடும் இடம் என 4 லட்சம் இடங்கள் பாஜகவினர் பிரம்மாண்ட ஏற்பாடு செய்திருந்தனர்.

இவற்றை LED திரை வழியாக ஒன்றிய அமைச்சர்களும், பாஜக ஆளும் மாநில முதல்வர்களும், கட்சி உறுப்பினர்களும் கேட்டனர். இது தவிர ஐ.நா. விலும் பிரதமர் மோடியின் உரை நேரடி ஒளிபரப்பப்பட்டது. மோடியின் 100-வது மன்கிபாத் உரையை லண்டனில் கேட்பதற்கு வசதியாக அங்கு வசிக்கும் இந்தியர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

முன்னதாக அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டு வருவதை சுட்டிக்காட்டப்பட்டு பேசிய பிரதமர் மோடி அவர்களது சாதனைகளையும் விளக்கினார். தமிழ்நாட்டில் பழங்குடியின பெண்கள் தெரக்கோட்ட குவளைகளை தயாரித்து விற்பனை செய்யவதையும் அவர் நினைவு கூர்ந்தார்.

The post பிரதமர் மோடியின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சி: தமிழ்நாட்டு பழங்குடியின பெண்களை குறித்து பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Nadu ,Delhi ,
× RELATED என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான்: பிரதமர் மோடி