×

வான்கடேவில் இன்று இரவு பலப்பரீட்சை ராஜஸ்தானை சமாளிக்குமா மும்பை?.. சேப்பாக்கத்தில் பிற்பகல் சிஎஸ்கே-பஞ்சாப் மோதல்

சென்னை: 16வது ஐபிஎல் தொடரில் இன்று 2 போட்டி நடக்கிறது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு 41வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் மோதுகின்றன. சென்னை 8 போட்டியில் 5 வெற்றி, 3 தோல்வி என 10 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. கடைசி போட்டியில் ராஜஸ்தானிடம் தோற்ற நிலையில் இன்று சொந்த மண்ணில் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்பில் உள்ளது.

மறுபுறம் தவான் தலைமையிலான பஞ்சாப் 8 போட்டியில் 4 தோல்வி, 4 வெற்றியுடன் 6வது இடத்தில் உள்ளது. கடைசி போட்டியில் லக்னோவிடம் 257 ரன் கொடுத்து தோல்வியை சந்தித்த நிலையில் இன்று வெற்றி நெருக்கடியில் உள்ளது. இரு அணிகளும் இதுவரை 27 போட்டியில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் 15ல் சென்னை, 12ல் பஞ்சாப் வென்றுள்ளது. சென்னைக்கு எதிரான கடைசி 3 ஆட்டங்களில் பஞ்சாப் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு வான்கடே மைதானத்தில் நடக்கும் போட்டியில், மும்பை இந்தியன்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் மோதுகின்றன. ராஜஸ்தான் 8 போட்டியில் 5 வெற்றி, 3 தோல்வி என 10 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. கடைசி போட்டியில் சென்னையை வீழ்த்திய நிலையில் இன்றும் வென்றால் முதல் இடத்திற்கு முன்னேறும். பேட்டிங்கில் ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர் மிரட்டி வருகின்றனர். மறுபுறம் 5 முறை சாம்பியனான மும்பை 7 போட்டியில் 3 வெற்றி, 4 தோல்வி கண்டுள்ளது. கடைசி 2 போட்டியிலும் தோல்வியை சந்தித்த நிலையில் இன்று வெற்றி பெற்று பட்டியலில் முன்னேற்றம் காணவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ரோகித்சர்மா, பார்ம் இழந்து தடுமாறி வருகிறார். மிடில் ஆர்டரும் சொதப்பலாக உள்ளது.

பந்துவீச்சு அதைவிட பரிதாப நிலையில் உள்ளது. இதனால் ராஜஸ்தானை சமாளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இரு அணிகளும் இதுவரை 26 முறை மோதி உள்ளன. இதில் 14ல் மும்பை, 12ல் ராஜஸ்தானும் வென்றுள்ளன.

The post வான்கடேவில் இன்று இரவு பலப்பரீட்சை ராஜஸ்தானை சமாளிக்குமா மும்பை?.. சேப்பாக்கத்தில் பிற்பகல் சிஎஸ்கே-பஞ்சாப் மோதல் appeared first on Dinakaran.

Tags : Rajasthan ,Balaperit ,Vancadeh Mumbai ,CSK ,Punjab ,Cheppakkam ,Chennai ,16th IPL Series ,Chennai Chepaukam ,M. PA ,Chidambaram Stadium ,Balaperish ,Vancadev Mumbai ,Chepakkam ,Dinakaran ,
× RELATED குஜராத், ராஜஸ்தானில் ரூ300 கோடி...