×

தேக்கடி ஏரி பகுதிக்கு தாகம் தீர்க்க வந்த யானைக்கூட்டம்: படகு சவாரி சென்ற சுற்றுலாப்பயணிகள் குஷி

கூடலூர்: தேக்கடி ஏரி பகுதியில் தண்ணீர் குடிக்க வந்த யானைகள் கூட்டத்தால், படகு சவாரி செய்த சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சர்வதேச சுற்றுலாத்தலமான கேரள மாநிலம், தேக்கடிக்கு, இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும், பல்வேறு நாடுகளிலிருந்தும் சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் வருகின்றனர். தேக்கடியில் யானை சவாரி, டைகர்வியூ, மூங்கில் படகு சவாரி என பல பொழுதுபோக்கு அம்சங்கள் இருந்தாலும், படகுச்சவாரியின் போது நீர்நிலைகளுக்கு வரும் யானைகள், மான்கள், காட்டு எருமை கூட்டங்கள் மற்றும் பல்வேறு வகையான பறவை இனங்களையும் காணவே சுற்றுலாப்பயணிகள் அதிகம் விரும்புவர். அதனால், இங்குள்ள சுற்றுலா இடங்களில் படகுச்சவாரியே முதலிடம் வகிக்கிறது. இங்கு படகுச்சவாரிக்கு டிக்கெட் கட்டணம் ரூ.385 ஆகவும், நுழைவுக் கட்டணம் ரூ.70 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போது பெரியாறு அணையின் நீர்மட்டம் 116.35 அடியாக குறைந்துள்ளதால் தேக்கடி ஏரியில் தண்ணீர் குறைந்து காணப்படுகிறது. இதனால் வனப்பகுதியிலிருந்து யானை, மான், காட்டெருமை உள்ளிட்ட விலங்குகள் தண்ணீர் குடிக்க ஏரியின் கரைப்பகுதிக்கு வருகின்றன. இதனை படகு சவாரி செய்யும் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியுடன் பார்த்து ஆரவாரம் செய்கின்றனர். இந்நிலையில் நேற்று தேக்கடி ஏரி மணக்கவலை பகுதியில் குட்டியுடன் கூடிய யானைக்கூட்டம் தண்ணீர் குடிக்க ஏரிக்கரைப்பகுதிக்கு வந்தது. அப்போது சுற்றுலாப்பணிகள் வந்த படகை நிறுத்தி நீண்டநேரம் இக்காட்சியை கண்டுரசித்தனர்.

The post தேக்கடி ஏரி பகுதிக்கு தாகம் தீர்க்க வந்த யானைக்கூட்டம்: படகு சவாரி சென்ற சுற்றுலாப்பயணிகள் குஷி appeared first on Dinakaran.

Tags : Elephant Kushi ,Dakkady ,Cuddalore ,Tekkady ,Elephant Elephant ,Lake Tacadi ,Kushi ,Dinakaran ,
× RELATED கள்ளத்தொடர்பை கைவிடாததால் மனைவியை வெட்டி கொன்ற கணவன்