×

குருவாயூர் கோயில் யானைகளுக்கு நடைபயிற்சி

பாலக்காடு: குருவாயூர் கோயில் யானைகளுக்கு நடைபயிற்சிக்கு கோயில் (தேவஸ்தானம்) நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. கேரள மாநிலம் குருவாயூர் கோயில் வளர்ப்பு யானைகள் முகாமில் யானைகளுக்கு (தேவஸ்தான) கோயில் நிர்வாகம் நடைபயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. குருவாயூர் கோயிலில் 42 வளர்ப்பு யானைகள் உள்ளது. இந்த வளர்ப்பு யானைகள் குருவாயூர் அருகே புணத்தூர் கோட்டையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள யானைகளுக்கு தினமும் நடைபயிற்சி மேற்கொண்டால் அவற்றின் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும் என கால்நடை மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து, தேவஸ்தான நிர்வாகம் யானைகளுக்கு நடைபயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதில், புணத்தூர் கோட்டையை சுற்றியுள்ள சுற்றுப்புற புதர்காடுகளை வெட்டி சீரமைத்து சாலை அமைக்கப்பட்டு, தினமும் 4 யானைகள் வீதம் பாகன்கள் நடைபயிற்சி அளித்து வருகின்றனர்.

The post குருவாயூர் கோயில் யானைகளுக்கு நடைபயிற்சி appeared first on Dinakaran.

Tags : Guruvayur Temple ,Devasthanam ,Kerala ,Guruvayur ,
× RELATED திருமலையில் பக்தர்கள் அதிகரிப்பு...