×

5ம் வகுப்பில் இருந்து 6ம் வகுப்பு செல்லும் 19 மாணவர்களுக்கு அறுசுவை விருந்து

 

க.பரமத்தி: க.பரமத்தி ஒன்றியம் தொட்டியபட்டி தொடக்கப்பள்ளியில் பயின்று மேல் வகுப்பிற்கு செல்லும் 19 மாணவர்களை பாராட்டி வாழ்த்தி வழி அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.
க.பரமத்தி ஒன்றியம் மொஞ்சனூர் ஊராட்சி தொட்டியபட்டி தொடக்கப்பள்ளியில் சுற்று பகுதிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் முதல் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை கல்வி பயின்று வருகின்றனர். இந்த கல்வியாண்டில் பள்ளிகள் நேற்று விடுமுறை விடப்படுவதாலும், 5ம் வகுப்பு மாணவர்கள் படித்து முடித்து விட்டு 6ம் வகுப்பிற்காக வேறு பள்ளிக்கு 19 மாணவ, மாணவிகள் செல்வதால் மாணவர்களை பாராட்டி வாழ்த்தி வழி அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மூர்த்தி தலைமையில் மாணவர்களுக்கு சுவையான உணவு வழங்கி மாணவர்களை பாராட்டி வாழ்த்தினார். இதில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், பள்ளி மேலாண்மை குழு தலைவர், உதவி தலைமை ஆசிரியர் உள்பட பலரும் பாரட்டி வாழ்த்தினர்.

The post 5ம் வகுப்பில் இருந்து 6ம் வகுப்பு செல்லும் 19 மாணவர்களுக்கு அறுசுவை விருந்து appeared first on Dinakaran.

Tags : K. Paramathi ,K. Paramathi Union ,Tiniyapatti Primary School ,
× RELATED குக்கிராமங்களில் கூட பைப் லைன்...