×

ஆந்திராவுக்கு மொபட்டில் 100 கிலோ ரேஷன் பருப்பு கடத்த உதவிய விற்பனையாளர்கள் 2 பேர் மீது வழக்கு ஒருவர் கைது

 

வேலூர்: ஆந்திராவுக்கு மொபட்டில் 100 கிலோ ரேஷன் பருப்பு கடத்தியவரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு உதவியதாக 2 ரேஷன் கடை விற்பனையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேலூரில் இருந்து கிறிஸ்டியான்பேட்டை வழியாக ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி, பருப்பு கடத்தப்படுவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி நந்தகுமாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வனிதா தலைமையில் முதல்நிலை காவலர்கள் ராஜவேல், வெங்கடேசன் ஆகியோர் நேற்று கிறிஸ்டியான்பேட்டை சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த மொபட்டை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், ரேஷன் கடையில் விற்பனை செய்யப்படும் 100 கிலோ பருப்பு கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மொபட்டில் வந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர் சித்தூர் மாவட்டம் பி.பி.அக்ராவரத்தை சேர்ந்த ஜெயராமன்(57) என்பதும், இவர் வேலூரில் இருந்து ரேஷன் பருப்பை ஆந்திராவுக்கு கடத்திச்சென்றதும் அங்கு கிலோ ₹85க்கு விற்பனை செய்வதும் தெரியவந்தது.தொடர்ந்து, மொபட்டுடன் 100 கிலோ ரேஷன் பருப்பை பறிமுதல் செய்து ஜெயராமனை கைது செய்து சிறையில் அடைத்தனர். ேமலும் ரேஷன் பருப்பை கடத்தி செல்வதற்கு உதவியதாக ராணிப்பேட்டை மாவட்டம் காரை, பிஞ்சி பகுதியில் உள்ள ரேஷன் விற்பனையாளர்கள் அறிவழகன், சுதாகர் ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post ஆந்திராவுக்கு மொபட்டில் 100 கிலோ ரேஷன் பருப்பு கடத்த உதவிய விற்பனையாளர்கள் 2 பேர் மீது வழக்கு ஒருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Andhra ,Vellore ,Anti Food Smuggling Unit ,
× RELATED மூதாட்டியை கொன்றவருக்கு வலை தனிப்படை...