×

வாழப்பாடி அருகே கரியராமர் கோயில் தேரோட்டம்

 

வாழப்பாடி: வாழப்பாடி அருகே 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மலைவாழ் மக்கள் வழிபடக்கூடிய கரியராமர் கோயில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், பெரிய கல்வராயன் மலை மேல்நாடு ஊராட்சியில் கரிய கோயில் பகுதியில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கரிய ராமர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சுமார் 100க்கும் மேற்பட்ட பழங்குடியின கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர். இக்ேகாயில் தேரோட்ட விழா, நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று பெரிய தேரோட்டம் நடைபெற்றது. இதில், கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வழிபாடு நடத்தினர்.

The post வாழப்பாடி அருகே கரியராமர் கோயில் தேரோட்டம் appeared first on Dinakaran.

Tags : Kariyaram temple ,Vazhapadi ,Vazhappadi ,Kariyaram Temple Chariotam ,
× RELATED நிலத்தை அளக்க எதிர்ப்பு டூவீலருக்கு தீ வைப்பு